உதவி

எடுத்துக்காட்டுக் கேள்விகள்

எடுத்துக்காட்டு: Exchange சர்வர்கள்

பொதுவான புள்ளிவிவரங்கள் · நேரத் தொடர்

கடந்த வாரத்தில், உலகளவில், ஒவ்வொரு நாளும் பதில்வினையாற்றுவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட IPv4, IPv6 முகவரிகளின் எண்ணிக்கையைக் காட்டுகின்ற, CVE-2023-36439 என்று குறிச்சொல் தரப்பட்ட ஓர் அடுக்கப்பட்ட கட்ட வரைபடம்.

பொதுவான புள்ளிவிவரங்கள் · காட்சியாக்கம் · அட்டவணை

கடந்த நாளில், உலகளவில், ஒவ்வொரு நாளும் பதில்வினையாற்றுவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட IPv4, IPv6 முகவரிகளின் எண்ணிக்கையைக் காட்டுகின்ற, CVE-2023-36439 என்று குறிச்சொல் தரப்பட்ட ஓர் அட்டவணை.

பொதுவான புள்ளிவிவரங்கள் · மர வரைபடம்

குறிப்பான ஒரு தேதியில் பதில்வினையாற்றுவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட IPv4 & IPv6 முகவரிகளின் எண்ணிக்கையைக் காட்டுகின்ற, CVE-2023-36439 என்று குறிச்சொல் தரப்பட்ட, தலா ஒரு நாட்டுக்குரிய எண்ணிக்கை அளவுவாரியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மர வரைபடம்.

ஒரு நாட்டுப் பகுதியை க்ளிக் செய்தால் ஆதாரங்கள் பிரித்துக் காட்டப்பட்டு, பொதுவான புள்ளிவிவரங்கள் CIA உலகத் தகவல் நூலிலிருந்து (CIA world factbook) தருவித்துக் காட்டப்படுகின்றன.

எடுத்துக்காட்டு: வெளிப்படுத்தப்பட்ட CWMP சாதனங்கள்

பொதுவான புள்ளிவிவரங்கள் · நேரத் தொடர்

2 ஆண்டுகளுக்கான (பொது டேஷ்போர்டில் உள்ள அதிகபட்சக் கால அளவு) வரலாற்றுத் தரவுகளைக் காட்டும் ஒரு காலவரிசை - இந்த நேர்வில் சவூதி அரேபியாவுக்கு ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தப்பட்ட CWMP சாதன IP முகவரிகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

குறிப்பு: இந்தக் கட்ட வரைபடம் ஜனவரி 2023-இன் முடிவில் CWMP வெளிப்பாட்டில் நிகழ்ந்த பெரிய அளவிலான மேம்பாட்டைக் காட்டுகிறது

எடுத்துக்காட்டு: MISP நேர்வுகள்

IoT சாதனப் புள்ளிவிவரங்கள் · காட்சியாக்கம் · பார் விளக்க அட்டவணை

ஸ்கேனிங்கின்போது பல சாதனங்களும் மென்பொருள் தீர்வுகளும் ஃபிங்கர்பிரின்ட் செய்யப்படலாம். இந்தக் கட்ட வரைபடம் (லாகரிதம் சார்ந்த அளவில்) MISP நேர்வுகள் இயங்குகையில், கடந்த மாதத்தில், சராசரியாக ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்பட்ட IP முகவரிகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

எடுத்துக்காட்டு: பயன்படுத்தப்பட்ட பலவீன நிலைகள்

தாக்குதல் புள்ளிவிவரங்கள்: பலவீன நிலைகள் · கண்காணித்தல்

கண்டுபிடிக்கப்பட்ட முயலப்பட்ட பயன்படுத்தப்படக்கூடிய முன்னணி 100 பலவீன நிலைகள் (எங்கள் ஹனிபாட்களில் இருக்கும் Shadowserver கண்காணிப்பான்களில் உள்ளவற்றில்), கடந்த நாளில் தனித்துவ தாக்குதல் IP-களின் எண்ணிக்கை வாரியாகத் தொடக்கத்தில் வகைப்படுத்தப்பட்டவை.

Map (வரைபடம்) விருப்பத் தேர்வை க்ளிக் செய்வதால் பயனர் “ஆதார” மற்றும் “இலக்கிட” ஹோஸ்ட் வகைகளுக்கிடையே மாறிக்கொள்ள முடிகிறது (அதாவது, தாக்கும் IP மின்னணு இருப்பிடம் Vs ஹனிபாட் IP மின்னணு இருப்பிடம்).

குறிப்பு: ஒரு தாக்கும் மின்னணு இருப்பிடம் தாக்குபவரின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டலாம் அல்லது காட்டாமலும் போகலாம்.

எடுத்துக்காட்டு: பொருள்கூறு நிகழ்வுகள்

டேஷ்போர்டைப் பயன்படுத்தி நிகழ்வுகளுக்குப் பொருள்கூறுதல்: எகிப்தில் வெளிப்படுத்தப்பட்ட CWMP சாதனங்கள் (Huawei இல்ல ரௌட்டர்கள் என்று நம்பப்படுகின்றன) இயல்புக்கு மாறான முறையில் அதிகரித்தல், அதையடுத்து அதே நாட்டிலிருந்து Mirai தாக்குதல்கள் வருதல்.

குறிப்பு: Shadowserver தெரியப்படுத்தவும் சரிசெய்யவும் எகிப்திய nCSIRT-உடன் பணிபுரிந்தது.

IoT சாதனப் புள்ளிவிவரங்கள் · நேரத் தொடர்

எகிப்திய உள்கட்டமைப்பில் வெளிப்படுத்தப்பட்ட IoT சாதனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது பற்றிய பதிவு, 2023-01-05 அன்று/வாக்கில் அறிவிக்கப்பட்டது.

வினா

IoT சாதனப் புள்ளிவிவரங்கள் · விற்பனையாளர் வாரியாக மர வரைபடம்

தேதிகளில் முன்னும் பின்னும் செல்வது 2023-01-05 முதல் புதிதாகப் புலப்படும் Huawei சாதனங்களாக இருக்க வாய்ப்புள்ள சாதனங்களைக் காட்டுகிறது.

வினா

பொதுவான புள்ளிவிவரங்கள் · நேரத் தொடர்

ஸ்கேனிங்கில் கண்டறியப்பட்ட, வெளிப்படுத்தப்பட்ட CWMP கண்டுபிடிப்புகளில் ஏற்பட்ட தொடர்பான அதிகரிப்பு, 2023-01-05 அதிகரிப்புடன் பொருந்துகிறது.

வினா

மிராய் மற்றும் புரூட் ஃபோர்ஸ் தாக்குதல்களை ஏவும் சந்தேகிக்கப்பட்ட அபாயத்திற்குள்ளான எகிப்தியச் சாதனங்களை Shadowserver ஹனிபாட் சென்சர்கள் அடையாளம் கண்டன.

வினா

நிகரான டெல்நெட் புரூட் ஃபோர்ஸ் தாக்குதல்கள் அபாயத்திற்குள்ளான எகிப்தியச் சாதனங்களிலிருந்து வந்தன.

வினா

பல ஆதாரங்களைப் பயன்படுத்திக் குறிச்சொல் மற்றும் இணைநிகழ்வு விருப்பத் தேர்வுகளைத் தேர்ந்தெடுப்பது, பதிவுகள் அதே கட்ட வரைபடத்தில் காட்டப்பட உதவுகிறது.

வினா

எடுத்துக்காட்டு: சிறப்பு அறிக்கைகள்

எப்போதாவது Shadowserver ஒருமுறை மட்டுமான சிறப்பு அறிக்கைகளை வெளியிடுகிறது. நாங்கள் தரவுகளை X-இலும்/Twitter-இலும் எங்கள் இணையத்தளத்திலும் அறிவிக்கிறோம் - ஆனால் நிகழ்வுக்குப் பின்பு நீங்கள் தொடர்புள்ள தேதிகளை அறிய விரும்பலாம். தேதிகளைக் கண்டறிய ஒரு வழி, நேரத் தொடர் விளக்க அட்டவணையில் சிறப்பு அறிக்கைத் தேதிகளைத் தேடுதல் - பின்பு நீங்கள் அந்தத் தேதிகளை ஒருநாள் புள்ளிவிவரங்களுக்கு இன்னும் பொருத்தமான பிற சித்தரிப்புகளுக்கு (வரைபடங்கள் அல்லது மர வரைபடங்கள் போன்றவை) இடமாற்றலாம். சிறப்பு அறிக்கைகளுக்கு ஆதாரம் டேஷ்போர்டில் special என்று அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நேரத் தொடர் விளக்க அட்டவணையில் சிறப்பு அறிக்கைகளைத் தேடுதல்:

வினா

2024-01-29 பற்றிக் கண்டறியப்பட்ட ஓர் எடுத்துக்காட்டு சிறப்பு அறிக்கைக்கான பட வரைபடம்:

சிறப்பு அறிக்கைகள் பட்டியல் ஒன்றைப் பெற, எங்கள் முதன்மை இணையத்தளத்தில் உள்ள அறிக்கைகளின் பட்டியலை தயவுசெய்து மீள்பார்வையிடுங்கள். சிறப்பு அறிக்கைகளுக்கு அவற்றின் பெயரில் “சிறப்பு” என்று இருக்கும்.

எடுத்துக்காட்டு: நேரத் தொடர் விளக்க அட்டவணைகள்

உயர் மாறுபாட்டை நிலைமாற்றுதல்

வெளியீடு நேரத் தொடர் விளக்க அட்டவணைகள் முன்னிருப்பாக அச்சுக் கோடுகளுக்கு ஒரு வெளிர் சாம்பல் நிறத்துடன் வருகின்றன. “உயர் மாறுபாட்டை நிலைமாற்று” (Toggle High Contrast) என்பதைத் தேர்வு செய்வதன் மூலம் அச்சுக் கோடுகளைக் கருப்பாக்குவது சாத்தியம் - இதை அறிக்கைகளில் தெரியச் செய்வது இன்னும் எளிது.

புலப்படுதிறனை நிலைமாற்றுதல்

பல தரவுத் தொடர்கள் ஒரு நேரத் தொடர் விளக்க அட்டவணையில் காட்டப்படும்போது - ஒவ்வொரு தரவுத் தொடரின் பெயரும் அதன் கீழ் குறிப்பிடப்படும். “புலப்படுதிறனை நிலைமாற்று” (Toggle Visibility) என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அனைத்துத் தரவுத் தொடர்களையும் பார்வையிலிருந்து தேர்வுநீக்கம் செய்வது சாத்தியம்.
பின்பு நீங்கள் விளக்க அட்டவணைக்குக் கீழ் உள்ள பெயரின்படி காட்ட விரும்பும் உருப்படிகளை மட்டும் க்ளிக் செய்யலாம். நீங்கள் தேர்வுசெய்யும் தரவுத் தொடர்களுக்கு/கூட்டிணைவுகளுக்கு இடமளிக்க, அளவு தானாகச் சரிப்படுத்திக்கொள்ளும்.

அடுக்குதலை நிலைமாற்றுதல்

பல தரவுத் தொடர்கள் ஒரு நேரத் தொடர் விளக்க அட்டவணையில் காட்டப்படும்போது, இணைநிகழும் தரவுகளை (அடுக்கப்பட்ட தரவுத் தொகுதிகளுக்கு நேரெதிராக) பார்க்க இரு வழிகள் உள்ளன. முதல் வழி, திரையின் இடப்பக்கம் உள்ள “இணைநிகழ்வு” (overlapping) நிலைமாற்றுப் பொத்தானைப் பயன்படுத்துவது. இது ஒவ்வொரு தரவுத் தொகுதிக்கும் தெளிவான கோடுகளுடன் விளக்க அட்டவணைகளை உருவாக்கும்.
இன்னொரு வழி, ஒவ்வொரு தரவுத் தொகுதிக்கும் அதற்கென்று வண்ண நிரப்பலுடன் விளக்க அட்டவணைகளை உருவாக்க ஹாம்பர்கர் தேர்வுக் கருவியின் “அடுக்குதலை நிலைமாற்று” (Toggle Stacking) விருப்பத் தேர்வைப் பயன்படுத்துதல். உங்கள் தரவுகளைப் பொறுத்து, வெவ்வேறு அணுகுமுறைகள் இன்னும் தெளிவான முடிவுகளைத் தரலாம்.

Shadowserver டேஷ்போர்டின் உருவாக்கத்திற்கு நிதியளித்தது UK FCDO. IoT சாதன ஃபிங்கர்பிரின்டிங் (அடையாளப்பதிவு) புள்ளிவிவரங்கள், ஹனிபாட் தாக்குதல் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) ஐரோப்பாவை இணைத்தல் வசதியும் (Connecting Europe Facility) (EU CEF VARIoT செயல்திட்டம்) நிதியளித்தது.

Shadowserver டேஷ்போர்டில் பயன்படுத்தப்படும் தரவுகளுக்காக அன்புடன் பங்களிக்கும் (அகரவரிசைப்படி) APNIC சமூகத் தகவல் ஊட்டங்கள், Bitsight, CISPA, if-is.net, Kryptos Logic, SecurityScorecard, யோகோஹோமா தேசியப் பல்கலைக்கழகம் (Yokohama National University), மற்றும் அநாமதேயமாக இருக்க முடிவுசெய்த எல்லோரும் உட்பட எங்கள் கூட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

Shadowserver பகுப்பாய்வுத் தரவுகளைத் திரட்ட குக்கிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இணையத்தளம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் அளவிட்டு எங்கள் பயனர்களுக்காகப் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது. குக்கிகள் மற்றும் அவற்றை Shadowserver எப்படிப் பயன்படுத்துகிறது என்பது பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு எங்கள் அகவுரிமைக் கொள்கையைப் பாருங்கள். உங்கள் சாதனத்தில் குக்கிகளை இவ்வாறு பயன்படுத்த எங்களுக்கு உங்கள் ஒப்புதல் தேவை.